அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-09 19:22 GMT
தென்காசி:
தென்காசியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 14-வது ஊதிய குழு ஒப்பந்தத்தை பேசி முடிக்காமல் இழுத்தடிப்பது கண்டித்தும், போக்குவரத்து துறையை தனியாருக்கு தாரை வார்க்க நினைப்பதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க சிவில் சப்ளை மாநில தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் குத்தாலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மேற்கு மண்டல தலைவர் சேர்மத்துரை, செயலாளர் ராமையா, பொருளாளர் ஆத்மநாதன், நகர அ.தி.மு.க. செயலாளர் சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்