பலத்த காற்றுடன் ஒரு மணி நேரம் மழை

குடியாத்தத்தில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Update: 2022-05-09 18:12 GMT
குடியாத்தம்

குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. காற்றுடன் மழை பெய்ய ஆரம்பித்ததும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பகலில் வெப்பமாக இருந்த நேரத்தில் இரவில் மழை பெய்ததால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

குடியாத்தம்-பலமநேர் சாலையில் முக்குன்றம் கிராமம் அருகே புளிய மரத்தின் கிளை ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு துறை, வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் இயந்திரங்கள் கொண்டு மரத்தை துண்டித்து போக்குவரத்தை சீர் செய்தனர். 

மேலும் செய்திகள்