5 பெண்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன
சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில்5 பெண்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.
சிவகங்கை,
சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்ப்பதற்காக சீமாங்க் பிரிவு செயல்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் இருப்பதை போன்று நவீன கருவிகள் உள்ளிட்ட வசதிகளுடன் செயல்படும் இந்த பிரிவில் எடை குறைவாக பிறந்த குழந்தைகளை இன்குபேட்டரில் வைத்து காப்பாற்றுவதற்காக தனியாக ஐ.சி.யு. வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் தற்போது பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட 5 பெண்களுக்கு இரட்டை குழந்தைகள் இருப்பது பரிசோதனை தெரிந்தது. தொடர்ந்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் மேற்பார்வையில் மகப்பேறு மருத்துவர் துறை தலைவர் டாக்டர் காயத்ரி மற்றும் பேராசிரியர் லட்சுமி ஆகியோர் மேற்பார்வையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 5 பெண்களுக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி சிவகங்கை அடுத்த பனங்குடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த உச்சரிச்சான்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இதேபோன்று கடந்த 2-ந்தேதி தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் 3-ந்தேதி கோவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் 4-ந்தேதி மேலச்சாலூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.
தற்போது இரட்டை குழந்தைகள் பெற்ற தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் நலமாக உள்ளனர்.