செல்போனை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு துணைத்தலைவர் தர்ணா போராட்டம்

செல்போனை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு துணைத்தலைவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2022-05-09 18:06 GMT
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி ஒன்றியம் டொக்குபோதனஅள்ளி ஊராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற பெண் தலைவர் பழனி தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் பழனிசாமி, ஊராட்சி செயலர் ஜெயராமன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது பெண் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர், கூட்டத்தை எதற்காக வீடியோ எடுக்கிறார் எனக்கூறி, துணைத்தலைவர் பழனிசாமியின் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து கீழே போட்டு உடைத்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு துணை தலைவர் பழனிசாமி செல்போனை உடைத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க க கோரி தரையில் அமர்ந்து நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் விரைந்து வந்து துணைத்தலைவர் பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்ேபாதுசெல்போனை உடைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர் தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார்.

மேலும் செய்திகள்