கிணறு தோண்டும் பணியின் போது தலையில் கல் விழுந்து தொழிலாளி சாவு

கிணறு தோண்டும் பணியின் போது தலையில் கல் விழுந்து தொழிலாளி பலியானார்.

Update: 2022-05-09 18:05 GMT
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வண்ணாம்பள்ளியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது52). தொழிலாளி. இவர் சக தொழிலாளர்களுடன்  கீழ்மத்தூர் பகுதியில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது கிணற்றின் மேல் இருந்து கல் தவறி உள்ளே விழுந்தது. இதில் ஆறுமுகத்தின் தலையில் கல் விழுந்து படுகாயமடைந்தார். சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது ஆறுமுகம் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்