வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு

தியாகதுருகம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு செய்தாா்.

Update: 2022-05-09 18:01 GMT
கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகம் பகுதியில் உள்ள முடியனூர், விருகாவூர், வேளாக்குறிச்சி, பொரசக்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை திட்ட இயக்குனர் மணி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள், சாலைகள் அமைக்கும் பணி, புதிய குடிநீர் கிணறு, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி மற்றும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் கிணறுகள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.  பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் அவர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி, பன்னீர்செல்வம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், உதவி பொறியாளர்கள் ஜெயப்பிரகாஷ், கோபி, விஜயன், பணி மேற்பார்வையாளர் சிவகுமார், ஊராட்சி செயலாளர்கள் சிவக்குமார், முத்துவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்