விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

நன்னிலம் அருகே மகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் விஷம் குடித்து தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2022-05-09 17:59 GMT
நன்னிலம்;
நன்னிலம் அருகே மகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் விஷம் குடித்து தொழிலாளி உயிரிழந்தார். 
உடல் நலக்குறைவு
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருப்பள்ளி முக்கூடல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை(வயது50). கூலித்தொழிலாளி. இவருடைய மகன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அண்ணாத்துரை மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். 
இந்தநிலையில் அண்ணாத்துரை வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். 
பரிதாப சாவு
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அண்ணாத்துரை இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் விஷம் குடித்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்