மெட்டாலாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மெட்டாலாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராசிபுரம்:
நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மெட்டாலாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் பழ மணிமாறன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கார்கூடல்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வாலிபர்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட பொருளாளர் அரசன், நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் கபிலன், வெண்ணந்தூர் பேரூர் செயலாளர் நடராஜன், ஒன்றிய பொறுப்பாளர்கள் செங்கோடன், அரவிந்த், முரளி, விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.