விழுப்புரத்தில் அரசு போக்குவரத்துக்கழக அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் அரசு போக்குவரத்துக்கழக அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு நேற்று மாலை அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்க வலியுறுத்தியும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான பணப்பலன்களை உடனே வழங்கக்கோரியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்புசாரா உடலுழைப்பு மற்றும் கட்டுமானப்பிரிவு பொருளாளர் ஆறுமுகம் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். விழுப்புரம் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வெங்கந்தூர் வக்கீல் பாஸ்கர், கள்ளக்குறிச்சி மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிற்சங்க நிர்வாகி கணேசன் வரவேற்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வன், விழுப்புரம் நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ், ஒன்றிய செயலாளர் ராஜா, நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், மண்டல இணை செயலாளர்கள் ஏழுமலை, காமராஜ், பணிமனை தலைவர் ராஜ்பிள்ளை, முன்னாள் செயலாளர் நக்கீரன், பணிமனை பொருளாளர் ராஜவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தங்கபாண்டியன் நன்றி கூறினார்.