தச்சுத்தொழிலாளி வீட்டில் ரூ.8 லட்சம் கொள்ளை
அரக்கோணத்தில் தச்சுத்தொழிலாளி வீட்டில் ரூ.8 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
அரக்கோணம்
அரக்கோணம் சின்ன கைனூரை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 44). தச்சுத்தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், மகள் உள்ளனர். திருவள்ளூரில் உறவினர் இறந்ததையொட்டி துக்கம் விசாரிப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு மகன்களை கடந்த இரு தினங்களுக்கு முன் திருவள்ளூரில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மகன்கள் மற்றும் மகளை அரக்கோணம் கணேஷ் நகரில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.
காலை 9 மணிக்கு திருவள்ளூரில் இருந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த துணிமணிகள் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த ரூ.8 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது,
இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு ஜெகதீசன் தகவல் அளித்தார். அதன்பேரில் அங்கு வந்த டவுன் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.