தவறி விழுந்த 5 பவுன் சங்கிலி மீட்பு

கும்பக்கரை அருவியில் குளித்தபோது சுற்றுலா பயணியிடம் இருந்து தவறி விழுந்த 5 பவுன் சங்கிலியை வனத்துறையினர் மீட்டனர்.

Update: 2022-05-09 16:40 GMT
பெரியகுளம்: 

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி உள்ளது. இந்த அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று திருச்சி மாவட்டம், வையம்பட்டியை சேர்ந்த மணி என்பவர் தனது குடும்பத்துடன் கும்பக்கரை அருவிக்கு வந்தார். அங்கு அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலி தவறி விழுந்து விட்டது. 

உடனே இதுகுறித்து அங்கு பணியில் இருந்த வனத்துறையினரிடம் மணி கூறினார். இதனை தொடர்ந்து அருவி தண்ணீரில் விழுந்த தங்க சங்கிலியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது அருவி பகுதியில் ஒரு பள்ளத்தில் விழுந்து கிடந்த தங்க சங்கிலியை வனத்துறையினர் மீட்டனர். பின்னர் அதனை மணியிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்