அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காங்கயம்,
காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று மாலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் காங்கயம் வட்ட கிளை பொறுப்பாளர் கே.மயில்சாமி தலைமை தாங்கினார்.
இதில் 2022 ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வினை ரொக்கமாக வழங்கவேண்டும். மறு உத்தரவு வரும் வரை முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈடுசெய்யும் விடுப்பினை ஒப்படைத்து பணப்பலன் பெரும் உரிமையை மீண்டும் வழங்கவேண்டும். தி.மு.க,வின் தேர்தல் கால வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் மு.சுப்பிரமணியனின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.