தமிழக மீனவர்களின் படகுகள் உடைக்கப்பட்டு விறகுகளாக விற்கப்படும் அவலம்
இலங்கையில் தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகள் உடைத்து விறகுகளாக விற்கப்பட்டு வருகிறது.
ராமேசுவரம்,
இலங்கையில் தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகள் உடைத்து விறகுகளாக விற்கப்பட்டு வருகிறது.
கைது
ராமேசுவரம், பாம்பன், மண்டபம், புதுக்கோட்டை, நாகப ்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு 200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் இலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 100-க்கும் மேற்பட்ட படகுகள் கடந்த பிப்ரவரி மாதம் ஏலம் விடப்பட்டது. ஏலம் விடப்பட்ட இந்த படகு களை இலங்கையில் உள்ள மீனவர்கள் பல லட்சம் ரூபாய் செலுத்தி ஏலத்தில் எடுத்து சென்றனர்.
இந்த நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொரு ளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல் ஒரு லிட்டர் 300 ரூபாய்க்கு அதிகமாகவும், மண்எண்ணெய் 200 ரூபாய்க்கு அதிகமாகவும், கியாஸ் சிலிண்டர் ரூ.2 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கியாஸ் சிலிண்டர் மற்றும் மண்எண்ணெய் விலை உயர்வு காரணமாக தமிழக மீனவர்களின் ஏலம் விடப்பட்ட படகு களை உடைத்து அதை விறகுகளாக விற்பனை செய்யும் அவலநிலை இலங்கையில் நடந்து வருகிறது.
கண்ணீர்
தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து விறகுகளாக விற்பனை செய்யப்பட்டு வருவதை பார்த்து தமிழக மீனவர்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர். இது குறித்து ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட செயலாளர் சேசுராஜா கூறியதாவது:- மீனவர்களின் வாழ்வாதாரமாக கருதப்படுவதே மீன்பிடி படகு தான். அவ்வாறு மீன்பிடிக்க சென்ற படகுகளை சிறைபிடித்து அந்த படகுகளை மீனவர்களிடம் ஒப்படைக் காமல் மனிதா பிமானம் இல்லாமல் அந்த படகுகளை ஏலம் விடப் பட்டதோடு மட்டுமில்லாமல் தற்போது படகுகளை உடைத்து விறகுகளாக இலங்கையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை பார்க்கும் போது உண்மையாகவே கண்ணீர் தான் வருகிறது.
விருப்பம்
இதையும் நமது அரசு வேடிக்கை தான் பார்த்து வருகிறது. ஏலம் விடப்பட்டு உடைக்கப்பட்டது போக மீதம் உள்ள படகுகளையாவது இலங்கை அரசுடன் பேசி மீட்டு தமிழகம் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மீனவர்களின் விருப்பம் மற்றும் கோரிக்கையாகும். இவ்வாறு அவர் கூறினார்.