பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வாலிபர் கைது

பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-09 14:05 GMT
கோப்பு படம்
பால்கர், 
பால்கர் மாவட்டம் தகானு பகுதியில் உள்ள அம்பேசாரி பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபரும், 24 வயது பெண்ணும் நீண்ட காலமாக திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று அந்த பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் அங்கு நடத்திய விசாரணையில், அப்பெண்ணுடன் வாழ்ந்து வந்த வாலிபர் தான் அந்த பெண்ணை தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்தது. 
இதையடுத்து அந்த வாலிபரை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்