அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2022-05-09 13:46 GMT
ஊட்டி

தமிழக அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004-ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று நீலகிரி மாவட்ட வருவாய்த்துறை உள்பட அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் அடுத்த கட்டமாக பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளதாக தெரிவித்தனர். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முத்துகுமார், பொருளாளர் ஆனந்தன், வருவாய்துறை ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் ரவி, குமார் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்