சென்னை விமான நிலையத்தில் மலேசியாவை சேர்ந்த போதை பொருள் கடத்தல் ஆசாமி கைது

சென்னை விமான நிலையத்தில் மலேசியாவை சேர்ந்த போதை பொருள் கடத்தல் ஆசாமி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-09 12:15 GMT
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மலேசிய நாட்டை சேர்ந்த மஹதரன் (வயது 51) என்பவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது, அவரை கா்நாடக மாநில, மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசார் 3 ஆண்டுகளாக போதை பொருள் கடத்தல் தொடர்பாக தேடி வருவது தெரியவந்தது.

மஹதரனை கைது செய்து தனி அறையில் வைத்து விசாரித்தனர். மேலும் இதுபற்றி பெங்களூருவில் உள்ள மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனா். பெங்ளூருவி்ல் இருந்து போதை தடுப்பு பிரிவு தனிப்படை போலீசாா் சென்னை வந்து, மஹதரனை அழைத்து செல்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்