அந்தியூர் பகுதியில் தொடர்ந்து 2-வது நாளாக சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை

அந்தியூர் பகுதியில் தொடர்ந்து 2-வது நாளாக சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை

Update: 2022-05-08 21:59 GMT
அந்தியூர்
அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு  சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.  இதேபோல் அந்தியூர், வரட்டுப்பள்ளம் அணைப்பகுதி, வட்டக்காடு, செல்லம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து நேற்று இரவு தொடர்ந்து 2-வது நாளாக சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை இரவு 8.30 மணியில் இருந்து 9.30 மணி வரை பெய்தது. இதனால் ரோடுகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. அந்தியூர் பகுதியில் வீசிய சூறாவளிக்காற்றால்  அந்தியூரில் இருந்து அத்தாணி செல்லும் வழியில் கரட்டூர் மேடு பகுதியில் மரக்கிளைகள் உடைந்து ரோட்டில் விழுந்தன. மேலும் மின் கம்பிகள் மீதும் விழுந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டு அந்தியூர் பகுதி நேற்று இருளில் மூழ்கியது. 

மேலும் செய்திகள்