108 சங்காபிஷேகம்
வாடிப்பட்டியில் சொக்கையா சுவாமிகள் மடத்தில் 108 சங்காபிஷேகம் நடந்தது.
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி ரெயில்வே நிலையம் அருகில் சொக்கையா சுவாமிகள் மடத்தில் சுவாமிகளின் 83-வதுஆண்டு குருபூஜை விழா நடந்தது.விழாவையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு மங்கல இசையுடன் தீபமேற்றி விநாயகர் பூஜை, கோபூஜை, ரிஷபபூஜை, அஷ்வபூஜை, கங்காபூஜை உள்ளிட்ட 108 சங்காபிஷேக பூஜைகளும் 16வகையான மூலிகையுடன் நெய் கலந்து ஹோமம் வளர்க்கப்பட்டது. காலை 7.40 மணிக்கு மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், மகா தீபாராதனை செய்யப்பட்டது. பின்னர் கலசங்கள் புறப்பட்டு அனைத்து மூர்த்திகளுக்கும் அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. 10.15 மணிக்கு சொக்கையாசுவாமிகளுக்கு திரவிய, கலாசாபிஷேகம், சங்காபிஷேகம், மகாஅபிஷேகம் செய்து அர்ச்சனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதன் ஏற்பாடுகளை மடநிர்வாக தலைவர் கே.மணிகண்டன் செய்திருந்தார்.