மாவட்டங்களில் ஒரே நாளில் 43,080 பேருக்கு தடுப்பூசி
மாவட்டங்களில் ஒரே நாளில் 43,080 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
பெரம்பலூர்
தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி, பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 30-வது மாபெரும் சிறப்பு முகாம்கள் நேற்று நடந்தது. முகாம்களில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 25,678 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 17,402 பேருக்கும் என மொத்தம் 43,080 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.