நெல்லையில் ஓய்வுபெற்ற சிறை அதிகாரி வீட்டில் நகை திருட்டு

நெல்லையில் ஓய்வுபெற்ற சிறை அதிகாரி வீட்டில் நகை திருடு போனது.

Update: 2022-05-08 18:45 GMT
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ெரயில்வே கேட் அருகே உள்ள மாசிலாமணி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 62). இவர் ஓய்வு பெற்ற சிறைத்துறை அதிகாரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் சென்னையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று காலை அவருடைய மகன் ஆனந்த் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்த் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 3 பவுன் நகை மாயமாகி இருந்தது. அதனை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்