ஏலகிரிமலையில் மலைவாழ் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

ஏலகிரிமலையில் மலைவாழ் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

Update: 2022-05-08 18:09 GMT
ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 1,516 இடங்களில் நடமாடும் முகாம் நடத்தப்பட்டது. 

ஏலகிரிமலை ஊராட்சியில் அத்தனாவூர், நிலாவூர், மங்கலம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 இடங்களில் முகாம் நடைபெற்றது. ஏலகிரி மலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுமன் தலைமையில், சுகாதார பணியாளர்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். 

ஏலகிரி மலை ஊராட்சியில் முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் முடிக்கப்பட்டுள்ள நிலையில், 4 இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் மலைவாழ் மக்கள் பங்கேற்று தங்களது 2-வது தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அ.திருமால், வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்