தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-05-08 17:48 GMT
திருச்சி
பாலத்தின் மேல் இருந்து விழும் மண்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், நம்பர் டோல்கேட் அருகே உத்தமர்கோவில் மேம்பாலத்தில் இருபுறமும் மழைநீர் வடிகால் துளை உள்ளது. நெடுஞ்சாலைத் துறைப் பணியாளர்கள் மேம்பாலத்தை கூட்டி சுத்தம் செய்து மண்ைண அள்ளாமல் மழைநீர் வடிகால் துளை வழியே கொட்டுகின்றனர். இந்த மண் பாலத்தின் அடிப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீதும், நடந்து செல்லும் பொதுமக்கள் மீது விழுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பிச்சாண்டார் கோவில், திருச்சி.

குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருச்சி மாநகராட்சி 51-வது வார்டு பீமநகர், பொன்விழா நகர் சந்திப்பு பகுதியில் இறைச்சி மற்றும் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகரிகள் குப்பைகள் அள்ளுவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க கொள்கிறோம்.
பொதுமக்கள், பொன்விழா நகர், திருச்சி.

குண்டும் குழியுமான சாலைகள்
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஐ.ஏ.ஸ் நகரில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க கேட்டு கொள்கிறோம்.
மோகன், திருவெறும்பூர், திருச்சி.

கழிவறையை சுத்தம் செய்ய கோரிக்கை
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஆண்களுக்கான பொதுக்கழிப்பறை ஒன்று உள்ளது. இந்த கழிவறை சரியாக பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பயணிகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த கழிவறை வழியாக செல்வோர் மூக்கை பிடித்து கொண்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவறையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, திருச்சி.

மேலும் செய்திகள்