ராமநாதபுரம்,
ராமநாதபுரம் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசமூர்த்தி மகன் நாகராஜன் (வயது41). டிரை சைக்கிள் ஓட்டி தொழில் செய்து வந்தார். மதுவுக்கு அடிமையாகி குடித்து வந்த இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் பேராவூர் அருகில் சென்று விட்டுதிரும்பி வந்து கொண்டிருந்த போது திடீரென்று வலிப்பு நோய் ஏற்பட்டுஉள்ளது. இதனை கண்டவர்கள் அவரின் செல்போனை எடுத்து மனைவிக்கு தகவல் சொல்லி உள்ளனர். உடனடியாக அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக் கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.