பயங்கரவாத எதிர்ப்பு பொதுக்கூட்டம்

ராமநாதபுரத்தில் பயங்கரவாத எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2022-05-08 17:17 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத் தூர் மணி, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் கலந்து கொண்டனர். 
அப்போது திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி கூறியதாவது:- சங்பரிவார் அமைப்புகள் எப்படியாவது தமிழகத்திலும் கால்பதிக்க விரும்பிய முயற்சிகள் தோல்வி அடைந்து வரும் நிலையில் தமிழக கவர்னர் அரசியல்வாதி போல கருத்து சொல்வது கண்டிக்கத்தக்கது. 
இவ்வாறு அவர்கூறினார்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறும்போது,  தமிழக கவர்னர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை பயங்கரவாத இயக்கம்போல சித்தரித்து கருத்து தெரிவித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. அண்மையில் உச்சநீதிமன்றமே பேரறிவாளன் விடுதலை சம்பந்தப்பட்ட நிகழ்வில் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அதனை திசை திருப்பும் வகையில் இதுபோல கருத்து தெரிவித் துள்ளார்.  உடனடியாக கவர்னர் தன்னு டைய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்  என்றார்.
இதைதொடர்ந்து நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு பொதுக்கூட்டத்திற்கு பெரியார் பேரவை தலைவர் நாகேசுவரன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் முகமது யாசின், எஸ்.டி.பி.ஐ. கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் முன்னிலை வகித்தனர். ஆதி தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் வரவேற்றார். தமிழ் மண்ணுரிமை இயக்கத்தை சேர்ந்த ஜெயராமன், கீழை பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். தமிழ்வாணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்