அந்தோணியார் ஆலய தேர் பவனி

அந்தோணியார் ஆலய தேர் பவனி

Update: 2022-05-08 17:00 GMT
வால்பாறை

வால்பாறை அருகே உள்ள முடீஸ் புனித அந்தோணியார் ஆலயத்தின் தேர்த்திருவிழா, கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு ஜெபவழிபாடு, திருப்பலி, நவநாட்கள் நடைபெற்று வந்தது. நேற்று மாலை 6 மணிக்கு தூய இருதய ஆலய பங்கு குரு மரியஜோசப் தலைமையில் குருக்கள் மரிய அந்தோணிசாமி, பினிட்டோ ஆகியோர் இணைந்து தேர்த்திருவிழா சிறப்பு கூட்டு பாடல் திருப்பலியை நிறைவேற்றினார்கள். 

பின்னர் புனித அந்தோணியார் சொரூபம் தாங்கிய தேர்பவனி முடீஸ் பஜார் பகுதி வரை சென்று மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு அய்யர்பாடி புனித வனத்துச்சின்னப்பர் ஆலய பங்கு குரு ஆனந்தகுமார் தலைமையில் தேர்த்திருவிழா சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது. திருப்பலிக்குப்பின் கொடியிறக்கமும், அன்பின் விருந்தும் நடைபெற்றது. தேர்த்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு குரு தலைமையில் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்