விவசாயியை வெட்டிய தம்பி கைது

தேவதானப்பட்டி அருகே விவசாயியை வெட்டிய தம்பியை கைது செய்தனர்.

Update: 2022-05-08 16:36 GMT
தேவதானப்பட்டி: 

தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 47). விவசாயி. இவருடைய தம்பி பாண்டியராஜன் (40). இருவருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு வீரமுத்து பாண்டியராஜனை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவர், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவர் வீடு திரும்பினார். 

இந்நிலையில் நேற்று பழிக்குப்பழியாக வீட்டின் முன் நின்று கொண்டிருந்த வீரமுத்துவை பாண்டியராஜன் அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த வீரமுத்துவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்