ஆவின் பூத் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

பள்ளிகொண்டா அருகே ஆவின் பூத் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-05-08 16:23 GMT
அணைக்கட்டு

அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா இறைவன்காடு காட்டுக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் சுரேஷ் (வயது 36). இவர் அதே பகுதியில் ஆவின் பாலகத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சுரேஷ் பல்வேறு இடங்களில் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் அதைத் திருப்பிக் கேட்டுள்ளனர்.

இதனால்மன உளைச்சலுக்கு ஆளாகி வந்த சுரேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வெளியே சென்றுவிட்டு வந்த மனைவி, கணவன் சுரேஷ் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி அழுது கூச்சலிட்டுள்ளார். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்