பந்தலூர் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

பந்தலூர் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

Update: 2022-05-08 14:16 GMT
பந்தலூர்

பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1974-1985 ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அப்துமஜீத் தலைமை தாங்கினார். தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு ராமலிங்கம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர். மேலும் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து முன்னாள் மாணவர்கள் பேரன் பேத்திகளுடன் நடனமாடி தங்களுடைய மகிழ்ச்சிைய வெளிப்படுத்தினார்கள். 

மேலும் செய்திகள்