முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சந்திப்பு

45 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-05-08 13:15 GMT
வேலூர்

வேலூர் ஓட்டேரியில் உள்ள முத்துரங்கம் அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் கடந்த 1974 முதல் 1977-ம் ஆண்டு வரை வரலாறு துறையில் படித்த மாணவ-மாணவிகள் மீண்டும் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி சுமார் 45 ஆண்டுகளுக்கு பின்னர் அவர்கள் சந்திக்கும் நிகழ்வு முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் நடந்தது. முன்னாள் மாணவர்கள் மணிஎழிலன், சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர் தலைமை தாங்கி பேசினார்.

இதில் பேராசிரியர்கள் நடராசன், தஞ்சி, ரத்தினம், மாசிலாமணி உள்பட பலர் சிறப்புரையாற்றினார்கள். பின்னர் முன்னாள் மாணவர்கள் கல்லூரி காலத்தில் நடந்த பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள், துறைத்தலைவர், பேராசிரியர்களுடனான நட்புறவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் பற்றி கூறி மகிழ்ந்தனர். முடிவில் முன்னாள் மாணவர் வீரமணி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்