மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சொரையூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2022-05-08 12:31 GMT
கலவை

கலவையை அடுத்த சொரையூர் கிராமத்தில் 300 ஆண்டு பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக முதல் கால யாகசாலையில் வாஸ்து பூஜை, கணபதி ஹோமம், இரண்டாவது கால யாக பூஜை, கோ பூஜை நடைபெற்றது. புனித நீரை மேளதாளத்துடன் எடுத்து சென்று புதுப்பிக்கப்பட்ட மாரியம்மன் கோவில் கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. 

மாலையில் சிம்ம வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் வாணவேடிக்கையுடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் வளர்மதி குமார், மாம்பாக்கம், ஆரூர், பொன்னம்பலம் போன்ற பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்