மாங்காடு ஊராட்சியில் வீடு வீடாக கொரோனா தடுப்பூசி போடும் பணி

மாங்காடு ஊராட்சியில் வீடு வீடாக கொரோனா தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2022-05-08 12:19 GMT
ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில்  ஆற்காடு ஒன்றியம் மாங்காடு ஊராட்சியில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. அந்தப் பணியை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஆற்காடு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்