எழும்பூர் ரெயில் நிலையம் பின்புறம் உள்ள சாலைக்கு ‘மணியம்மையார் சாலை’ என்று பெயர் சூட்டல்

சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் பின்புறம் அமைந்துள்ள வேனல்ஸ் சாலையை ‘அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் சாலை’ என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

Update: 2022-05-08 08:40 GMT
அதன்படி இந்த சாலைக்கு புதிய பெயர் பலகை வைக்கப்பட்டு, அதனை திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் தலைமை தாங்கினர். சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ‘அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் சாலை’ என்ற பெயர் பொறிக்கப்பட்ட பலகையை திறந்து வைத்தார்.

மேலும் செய்திகள்