விக்கிரவாண்டி அருகே நாகம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

விக்கிரவாண்டி அருகே நாகம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

Update: 2022-05-08 00:12 GMT
விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி அடுத்த தும்பூர் தாங்கல் கிராமத்தில் உள்ள நாகம்மன் கோவிலில் சித்திரை மாதம் 4-ம் வெள்ளிக்கிழமையை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சுயம்பு நாகம்மனுக்கு திருமஞ்சன பொடி, அரிசி மாவு, பால், தயிர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்து, அம்மன் வளைகாப்பு அலங்காரம் மற்றும் மலர்களால் அலங்கரித்து சிறப்பு அர்ச்சனையுடன் மகா தீபாராதனை நடந்தது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலிருந்து குலதெய்வ வழிபாட்டுகாரர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இதனால் கோவில் வளாகத்தில் கூட்டம் அலை மோதியது. பக்தர்களுக்கு தனியார் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது, விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையதுறை செயல் அலுவலர் கார்த்திகேயன், ஆய்வாளர் பல்லவி, கிராம முக்கியஸ்தர்கள் முன்னின்று செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்