அரசு பஸ் மோதி வாலிபர் பலி

அரசு பஸ் மோதி வாலிபர் பலி

Update: 2022-05-07 20:14 GMT
வாடிப்பட்டி, மே.8-
வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டையை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 38). இவர் நேற்று இரவு 7.15 மணிக்கு அய்யங்கோட்டையில் மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொது மக்கள் தொடர்ந்து விபத்து சம்பவங்கள் நடைபெறுவதால் அய்யங்கோட்டையில் மேம்பாலம் அமைத்து தர வேண்டுமென கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுரை-திண்டுக்கல் நான்குவழிச் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வாடிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.

மேலும் செய்திகள்