நிதி நிறுவன அதிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது
நிதி நிறுவன அதிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மதுரை ரோடு ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலபதி (வயது 50). நிதி நிறுவன அதிபரான இவர் ஜீவா நகர் அருகே நடந்து சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் (22) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3 ஆயிரத்தை பறித்து சென்றார்.
இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைராஜை கைது செய்தனர். துரைராஜ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைராஜை கைது செய்தனர். துரைராஜ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.