மணல் கடத்திய 3 பேர் கைது
மணல் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
அன்னவாசல்,
இலுப்பூர் அருகே தென்னலூர் பகுதியில் சிலர் மணல் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் காடுவெட்டிகுளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற பொக்லைன் எந்திரம் மற்றும் டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை ெசய்தனர். அப்போது மணல் கடத்தி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து பொக்லைன் எந்திரம் மற்றும் டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்னலூர் பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 37), ராமலிங்கம் (30), மலைக்குடிப்பட்டியை சேர்ந்த நாகராஜ் (21) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.