ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 1,500 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,500 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது என்று கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-07 19:46 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,500 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது என்று கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

 கொரோனா தடுப்பூசி முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 1,500 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 29-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 74 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி மற்றும் 55 சதவீதம் பேர் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளார்கள்.

தற்போது ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 830 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 93 ஆயிரத்து 920 கோவேக்சின் தடுப்பூசிகளும் இருப்பு உள்ளது. உடல் ஊனமுற்றவர்களுக்கு அவர்களின் இல்லம் தேடிச் சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 வழிகாட்டு நெறிமுறைகள்

இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்