உத்தமர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கொள்ளிடம் டோல்கேட், மே.8-
திருச்சி நெ.1டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் பிரசித்தி பெற்ற உத்தமர் கோவில் உள்ளது. இக்கோவில் திருமங்கையாழ்வாரால் பாடல் தலம் ஆகும். இங்கு ஆண்டு தோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் காலை 8 மணிக்கு கருடர் படம் பொறித்த கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு திரவியம் பொடி, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இந்த விழா 11 நாட்கள் நடக்கிறது. தினமும் சூரியபிரபை வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம் யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் புருஷோத்தம பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வருகிற 14-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.