மிரட்டி பணம் கேட்டதாக திருநங்கைகள் கைது

சிவகாசி அருகே மிரட்டி பணம் கேட்டதாக திருநங்கைகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-07 19:26 GMT
சிவகாசி, 
ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டி குலாலர் தெருவை சேர்ந்தவர் திருப்பதி (வயது 31). இவர் சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள பிள்ளைக்குழி பகுதியில் உள்ள ஒரு மனமகிழ் மன்றத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் வேலை முடிந்து வந்த போது அங்கு வந்த திருநங்கைகள் காளீஸ்வரன் என்கிற பூர்ணிமா (28), தன்சிகா (25) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்பதி சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து திருநங்கைகள் 2 பேரையும் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்