அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆறுதல்
விபத்தில் காயமடைந்த மாணவிகளுக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆறுதல் கூறினார்.
சாத்தூர்,
சாத்தூர் அருகே நடைபெற்ற விபத்தில் கல்லூரி மாணவிகள் 26 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் மதுரை, விருதுநகர், சாத்தூர் ஆகிய பகுதிகளில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது கலெக்டர் மேகநாதரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு மனோகர், சாத்தூர் நகர்மன்ற தலைவர் குருசாமி, ஊராட்சி ஒன்றிய சேர்மன் நிர்மலா கடற்கரைராஜ், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், கடற்கரைராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.
அதேபோல ம.தி.மு.க. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய துணைச்சேர்மன் செல்லத்தாய் குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் பாலகிருஷ்ணன், குணசேகரன் ஆகியோர் விபத்தில் காயம்பட்ட மாணவிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.அதேபோல அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி மற்றும் கட்சி நிர்வாகிகளும் சந்தித்து ஆறுதல் கூறினர்.