தக்கோலத்தில் சென்னை பேரூராட்சிகளின் ஆணையர் ‘திடீர்’ ஆய்வு

சென்னை பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ், தக்கோலம் பேரூராட்சிக்கு வந்து ‘திடீர்’ ஆய்வில் ஈடுபட்டார்.

Update: 2022-05-07 18:37 GMT
அரக்கோணம்

சென்னை பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ், தக்கோலம் பேரூராட்சிக்கு வந்து ‘திடீர்’ ஆய்வில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து அங்குள்ள திடக்கழிவு மேலாண்மை வளமீட்பு பூங்கா, சன்னதி தெருவில் உள்ள கட்டண கழிப்பிடம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற சாலை அபிவிருத்தி 2021 - 22க்கான திட்டப்பணியின் கீழ் எஸ். என்.கண்டிகையில் போடப்பட்ட சாலையின் நிலை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பேரூராட்சிகளின் கண்காணிப்பு பொறியாளர், வேலூர் மண்டல செயற் பொறியாளர்கள், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜீஜாபாய், தக்கோலம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், பேரூராட்சி தலைவர் நாகராஜன், துணை தலைவர் கோமளா உள்பட ஊழியர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்