பெண் தீக்குளித்து தற்கொலை
கரூரில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்,
தகாத உறவு
கரூர் ரெயில்வே காலனியை சேர்ந்தவர் சுகந்தி (வயது 30). இவருக்கும், தர்மநாதன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் தர்மநாதன் வேறொரு பெண்ணுடன் தகாத உறவு கொண்டும், குடிப்பழக்கத்திற்கும் அடிமையாகி உள்ளார். இதனால் தர்மநாதனை, சுகந்தி கண்டித்துள்ளார்.
தற்கொலை
இதனால் மனமுடைந்து காணப்பட்ட சுகந்தி சம்பவத்தன்று வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனால் அலறி துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவவனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சுகந்தி பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்து சுகந்தியின் தாய் லலிதா கரூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.