வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

இளையான்குடி அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடப்பட்டது.

Update: 2022-05-07 18:07 GMT
இளையான்குடி,

 இளையான்குடி அருகே சாலைக்கிராமம், வலசைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 53). இவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகின்றார்.இவருடைய மனைவி பொன்னம்மாள் (48) மட்டும் இங்கு தனியாக வீட்டில் வசித்து வந்து உள்ளார்.இந்த நிலையில் இவர் தனது மகன் விக்னேஸ்வரன் வீட்டிற்கு தேவகோட்டைக்கு சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். ேமலும் நகை, பணம் கிடைக்காததால் வீட்டு அலமாரியில் இருந்த துணிமணிகளுக்கு தீ வைத்து விட்டு சென்று உள்ளனர். இது குறித்து சாலைக்கிராமம் போலீஸ் நிலையத்தில் பொன்னம்மாள் புகார் கொடுத்துள்ளார். இந்த திருட்டு சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்