மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டா் பாலசுப்பிரமணியம் பரிசு வழங்கினார்.
கடலூர்,
கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாணவர்களும், 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாணவிகளும் கலந்து கொண்டு விளையாடினர். இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். சுங்கத்துறை துணை ஆணையர் வெங்கடேஷ் பாபு முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவா வரவேற்றார். விழாவில் டென்னிஸ் சங்க தலைவர் சுந்தரேசன், துணைத் தலைவர் நெப்போலியன், பயிற்சியாளர் அப்பாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.