பரிசுப்பொருள் அனுப்புவதாக கூறி வானூர் விவசாயியிடம் ரூ.2 லட்சம் மோசடி மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

பரிசுப்பொருள் அனுப்புவதாக கூறி வானூர் விவசாயியிடம் ரூ.2 லட்சம் மோசடி மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

Update: 2022-05-07 17:50 GMT
விழுப்புரம்

விவசாயியிடம் பணம் மோசடி

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா ஒழிந்தியாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 28), விவசாயி. இவரிடம் முகநூல் மூலம் அறிமுகமான நபர் ஒருவர் கடந்த 27.4.2022 அன்று வாட்ஸ்-அப் மூலமாக தொடர்பு கொண்டு, உங்களுக்கு பரிசுப்பொருட்கள் அனுப்பி உள்ளதாக கூறினார். பின்னர் கடந்த 3-ந் தேதியன்று தொடர்பு கொண்டு பேசிய நபர், தான் டெல்லி விமான நிலையத்தில் இருந்து பேசுவதாக கூறி பரிசுப்பொருளை பெற வேண்டுமெனில் பணம் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை உண்மை என நம்பிய பாலாஜி, தனது கூகுள்பே மூலமும் மற்றும் தனது நண்பரிடம் கடன் பெற்று அவரது கூகுள்பே மூலமும் ரூ.2 லட்சத்து 58 ஆயிரத்து 400-ஐ அந்த நபர் கூறிய வங்கியின் கணக்கிற்கு அனுப்பினார். பணத்தை பெற்ற அந்த நபர், பாலாஜிக்கு பரிசுப்பொருள் ஏதும் அனுப்பி வைக்காமல் பணத்தை ஏமாற்றி மோசடி செய்து விட்டார்.

மர்ம நபருக்கு வலைவீச்சு

இதுகுறித்து பாலாஜி, விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் முகமது அசாருதீன், ரவிசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்