திண்டிவனம் பகுதியில் தொழிலாளி வீட்டில் புகுந்து 5 பவுன் நகை திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை

திண்டிவனம் பகுதியில் தொழிலாளி வீட்டில் புகுந்து 5 பவுன் நகை திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை

Update: 2022-05-07 17:42 GMT

திண்டிவனம்

திண்டிவனம் அடுத்த பழமுக்கல் புது காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமாரசாமி மகன் ராஜி(வயது 53). தொழிலாளியான இவர் நேற்று முன் தினம் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவரது மனைவி ராணி மகன் அய்யப்பன் ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர். 
நள்ளிரவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அய்யப்பன் படுக்கையில் இருந்து எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அறையின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த தங்க ஆரம், மாட்டி, மோதிரம் என மொத்தம் 5¾ பவுன் நகைகளை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. திருடு போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேலில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்