மணல் கடத்திய டிரைவர் கைது

பொள்ளாச்சி அருகே சமத்தூரில் மணல் கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-07 17:26 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே சமத்தூர் வழியாக உரிய அனுமதி இல்லாமல் மண் கடத்துவதாக கோட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார், உதவியாளர் லோகநாயகன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். அப்போது லாரியில் கிராவல் மண் இருந்தது. மேலும் மணலை கடத்தி சென்றது தெரியவந்தது.

 இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடுமலை அருகே உள்ள சோமவாரபட்டியை சேர்ந்த மாரிமுத்து (வயது 35) என்பவரை கைது செய்தனர். மேலும் 2 யூனிட் மணலுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்