100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சியில் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை நகரமன்ற தலைவர் சுப்புராயலு தொடங்கி வைத்தார்.

Update: 2022-05-07 16:45 GMT
கள்ளக்குறிச்சி, 

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்ட திறந்த வெளி இடங்களில் அடர்வன காடுகளை உருவாக்கும் வகையில் மரக்கன்றுகள் நட்டு பசுமை சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 7-வது வார்டு சங்கராபுரம் சாலை கோமுகி ஆற்றங்கரை அருகில் உள்ள இடத்தில் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் சுப்புராயலு கலந்துகொண்டு மாங்கன்று, கொய்யா, பாதாம் உள்பட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் குமரன், நகர மன்ற துணை தலைவர் ஷமிம்பானு அப்துல்ரசாக், நகரமன்ற உறுப்பினர்கள் மீனாட்சிகேசவன், தேவராஜ், ரமேஷ், செல்வம், யுவராணி ராஜா, நகரமைப்பு ஆய்வாளர் தாமரைச்செல்வன், உமா மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்