தளி அருகே மின்சாரம் தாக்கி 2½ வயது குழந்தை பலி

தளி அருகே மின்சாரம் தாக்கி 2½ வயது குழந்தை பலியானான். மின்சாரம் தாக்கியது

Update: 2022-05-07 16:36 GMT
தேன்கனிக்கோட்டை:

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள பெருங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 30). இவருடைய மனைவி கோகிலா. இந்த தம்பதிக்கு 2½ வயதில் சிவசக்தி என்ற ஆண் குழந்தை இருந்தது. சக்திவேல் தனது மனைவி, குழந்தையுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள பெல்லூரில் தங்கி அங்குள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 

இந்தநிலையில் நேற்று குழந்தை சிவசக்தி வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த எர்த் கம்பியை பிடித்தபோது, மின்சாரம் அவனை தாக்கியது. இதை பார்த்து அதிச்சி அடைந்த கோகிலா குழந்தையை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. 

மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டகள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். கோகிலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தளி போலீசார் விரைந்து சென்று குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தளி அருகே மின்சாரம் தாக்கி குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்