அனுமந்தன்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

அனுமந்தன்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

Update: 2022-05-07 15:49 GMT
உத்தமபாளையம்: 

உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்த பகுதி பொதுமக்களுக்கு லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமும், உத்தமபாளையம் முல்லைப்பெரியாற்றில் உறை கிணறு அமைத்தும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 
இந்தநிலையில் லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் சீராக நடக்க வில்லை. இந்த நிலையில் இன்று மாலை 6-வது வார்டு பொதுமக்கள் குடிநீர் கேட்டு அனுமந்தன்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் உத்தமபாளையம்-கம்பம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்துசென்றனர். சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது,


மேலும் செய்திகள்